முகப்பு
செய்திகள்

முதன்முறையாக காதலருக்கு நன்றி கூறிய நடிகை நயன்தாரா!

பிரபல ஆங்கில நாளிதழ் நடத்திய வேர்ல்டு ஆஃப் வுமன் 2018 (World Of Women 2018) என்ற விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார்.

Updated On : 25 மார்ச், 2018 at 12:21 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:04 PM

கோலிவுட்டின் சூப்பர் ஜோடி என்று புகழப்படுபவர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிதான். சமூக வலைத்தளங்களில் இந்த இணையரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அண்மையில் நடந்த விழாவொன்றில் பொதுமேடையில் காதலருக்கு நயன்தாரா நன்றி தெரிவித்தார்.

பிரபல ஆங்கில நாளிதழ் நடத்திய வேர்ல்டு ஆஃப் வுமன் 2018 (World Of Women 2018) என்ற விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நீண்ட காலம் ரசிகர்களை தக்க வைத்து திரையுலகில் வெற்றி வலம் வருகிறார் நயன்தாரா. அவரது இந்த சாதனையை பாராட்டும் விதமாக Excellence in entertainment எனும் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

அந்நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, இந்த விருது மற்ற விருதுகளைப் போலில்லை. இது எனக்கு வித்யாசமான விருதாகும். இந்த விருதை வாங்கும் மற்றவர்கள் என்னை பெரிதும் ஊக்குவிக்கிறார்கள். என்னுடைய வளர்ச்சியின் காரணமான எனது அம்மா, சகோதரருக்கு நன்றி. மற்றும் வருங்கால கணவருக்கும் நன்றி’  என முத்தாய்ப்பாகக் கூறியுள்ளார் நயன்தாரா. மேடையில் முதன்முறையாக தனது காதலை ஒப்புக்கொள்ளும் விதமாக வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிகழ்ச்சிக்கு நயன்தாரா அணிந்து வந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது நயனின் இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.