முகப்பு
செய்திகள்

தாத்தாவானார் நடிகர் வடிவேலு! மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சி!

வடிவேலு தமிழ் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த நகைச்சுவை நடிகர். தமிழ் திரையுலகில் அவருடைய பங்களிப்பு அளவில்லாதது.

Updated On : 1 மே, 2018 at 3:17 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:34 PM

வடிவேலு தமிழ் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த நகைச்சுவை நடிகர். தமிழ் திரையுலகில் அவருடைய பங்களிப்பு அளவில்லாதது. வடிவேலுவின் நகைச்சுவை குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடும். காரணம் அவருடைய குரல் வளமும், அதில் அவர் காண்பிக்கும் மாடுலேஷன்களும், தனித்துவமான உடல் மொழியும் எனலாம். தவிர ஆஹான்...அவ்வ்வ்வ்வ், ஊஊஊஊ போன்ற சிறப்பு சத்தங்களையும் உருவாக்குபவர் என்பதாலே குழந்தைகளுக்கும் பிரியமான நடிகரானார்.

அண்மையில் வடிவேலுவின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் வடிவேலுவின் மகளுக்கு பிறந்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருப்பதால் வடிவேலு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்து சிறப்பாகக் கொண்டாடினார். 

தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு. அந்தப் படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். விமல் - வடிவேலு புதிய காம்போ கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Advertisement

இயக்குநர் சுராஜ் அர்ஜுன் - வடிவேலு கூட்டணியில் ‘மருதமலை’ படத்தை இயக்கியவர். அந்தப் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுவருகிறது. சுராஜின் பெயரிடப்பட்டாத இந்தப் படத்தில் விமலுடன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார் என்றனர் படக்குழுவினர்.

அண்மைக்காலமாக திரைப்படங்களில் அதிகம் காணாமலான வடிவேலு மீம்ஸ்களிலும், நகைச்சுவை சானல்களில் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். தற்போது இந்தப் படம் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸாக அமையும் என வடிவேலு ரசிகர்கள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.