செய்திகள்

வெளியானது காலாவின் 'செம்ம வெயிட்டு' பாடல் 

ரஜினிகாந்த்தின் 'காலா' திரைப்படத்தின் 'செம்ம வெயிட்டு' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

கவியழகன்

சென்னை: ரஜினிகாந்த்தின் 'காலா' திரைப்படத்தின் 'செம்ம வெயிட்டு' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் அனைத்து பாடல்களும் மே 9-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், செம்ம வெயிட்டு என்கிற ஒரு பாடல் மட்டும் நாளை இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று திங்களன்று தகவல் வெளியானது.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் 'காலா' திரைப்படத்தின் 'செம்ம வெயிட்டு' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் மற்றும் டோபேடெலிக்ஸ் ஆகிய இருவரும் தமிழ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பாடலில் ராப் இசை மற்றும் இந்தி பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றை டோபேடெலிக்ஸ்  குழுவினர் எழுதியுள்ளனர். 

இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹரிஹர சுதன் இணைந்து பாடியுள்ளனர்.

பாடலுக்கு ரசிகர்களிடம் என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT