செய்திகள்

யார் இந்த சிக்ஸ் பேக் நடிகை?

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகர்கள் படத்தின் தேவை கருதியோ அல்லது தங்கள் ஸ்டைல் கருதியோ

சினேகா

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகர்கள் படத்தின் தேவை கருதியோ அல்லது தங்கள் ஸ்டைல் கருதியோ சிக்ஸ் பேக் அவதாரம் எடுப்பார்கள். டாம் க்ரூஸ், அமீர் கான், சூர்யா, விக்ரம், விஜய், ஆர்யா என பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்துள்ளார்கள். ஆனால் நடிகைகளில் யாரும் இந்த ரிஸ்க் எடுத்ததில்லை.

பிரபல நடிகர்களைப் போலவே தற்போது நடிகை ரித்திகா சிங்கும் தனது உடலமைப்பை சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாற்றியிருக்கிறார். தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'வணங்காமுடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஃபிட்டாகாவும் வைத்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவர் ரித்திகா. தற்போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். இதற்காக தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். ஜிம் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் ரித்திகா. அண்மையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரித்திகா. அவரது ரசிகர்கள் இதனை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.

ரித்திகா சிங் நடிக்க வருவதற்கு முன் குத்துச் சண்டை வீராங்கணையாக இருந்தவர். சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் குத்து சண்டை பயிற்சிக்கு நேரமில்லாமல் போனதால் அதற்குப் பிறகு போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார்.

தற்போது மீண்டும் குத்துச் சண்டையிலும் கவனத்தை செலுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT