செய்திகள்

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகை!

தெலுங்கு பட ஷுட்டிங்கில் உலோகத்தால் ஆன ஆடை ஒன்றை அணிந்து நடித்துள்ளார் அதிதி ராவ்.

சினேகா

தெலுங்கு பட ஷுட்டிங்கில் உலோகத்தால் ஆன ஆடை ஒன்றை அணிந்து நடித்துள்ளார் அதிதி ராவ். கதைக்கான ஒரு காட்சிக்காக பிரத்யேகமாக அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் ஆடையை அணிந்து அதிதி நடித்தபோது தவறி கீழே விழுந்து, அவரது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டது. உடலிலும் சிராய்ப்புகளும் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தைப் பொருட்படுத்தாமல் ஷூட்டிங் பாதிக்கபட வேண்டாம் எனக் கூறி தான் சம்பந்தப்பட்ட அந்தக் குறிப்பிட்டக் காட்சியை சிறப்பாக நடித்துக் கொடுத்துவிட்டுதான் சென்றாராம் அதிதி. இன்னும் பெயரிடப்படாத இந்தத் தெலுங்குப் படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார்.

தற்போது இன்னொரு தெலுங்குப் படமான சம்மோகனம் மற்றும் மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதிதி ராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT