ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' வரிசைப் படங்கள், உலகத் திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாகவும் அமைந்தவை.
அதன் புதிய பாகமாக 'மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட்’ என்ற படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவான இந்த ஸ்பை திரில்லர் படத்தில் வெற்றி நாயகன் டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்களின் பலத்த ஆதரவைப் பெற்ற நிலையில், மே 15-ம் தேதி இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டனர் படக்குழுவினர். வெளியான மூன்று நாட்களில் இதுவரை 10 ஆயிரம் கருத்துரைகளையும், பத்து மில்லியன் பார்வையாளர்களையும் மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட் ட்ரெய்லர் பெற்றுள்ளது. அவ்வகையில் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துவிட்டது.
பரபரப்புக்கு சற்று பஞ்சம் இருக்காத சேஸிங் காட்சிகள் உட்பட, பதற்றப்படுத்தும் ஹெலிகாப்டர் சேஸிங்கில் அசத்துகிறார் டாம் க்ரூஸ். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் பலத்த அடி பட்டது. சிகிச்சைக்கும் ஓய்வுக்கும் பின்னர் படப்பிடிப்பில் மீண்டும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விரைவாக ஷூட்டிங் தொடர ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் டாம் க்ரூஸ்.
இந்தப்படம் வரும் ஜுலை 27-ம் தேதி அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.