செய்திகள்

இது முழுமையான ஒரு மக்களிசைப் பாடல்! பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடலுக்குக் கிடைத்த பாராட்டு! (விடியோ)

சினேகா

'அட்டகத்தி', "மெட்ராஸ்', 'கபாலி' ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். 

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். 

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.  காதல், ஆக்ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் படப்புகழ் ஆனந்தி நடிக்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு.

இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படத்தைப் பற்றி கூறியபோது, 'பிரச்னைகளை எளிமையான முறையில் சொல்கிறது என் படம். பிரசாரம் செய்வதுபோல இருக்காது. என்னுடைய கதாநாயகன் ஒரு மாணவன். சட்டக்கல்லூரியில் படிக்கும் அவன், உலக நடப்புகளை அறிந்துகொண்டபிறகு மாறுபவன். பார்க்க வெள்ளந்தியாகவும் நல்ல நடிகராகவும் உள்ளவர் எனக்கு கதாநாயகன் வேடத்துக்குத் தேவைப்பட்டார். விக்ரம் வேதா படத்தில் கதிர் அதுபோல நடித்திருப்பார். எனவே அவரைத் தேர்வு செய்தேன். 

என் எழுத்துகளைப் படிக்கும் ரஞ்சித் அண்ணா, எப்போதும் என்னை உற்சாகப்படுத்துவார். படம் தயாரிப்பது என அவர் முடிவு செய்தபிறகு, என்னிடம் கதை ஏதாவது உள்ளதா என்று கேட்டார். அப்போதுதான் இப்படத்தின் கதையைச் சொன்னேன். ஒருவரியில் கதையைச் சொன்னவுடன் ரஞ்சித் அண்ணாவுக்குப் பிடித்துவிட்டது. தான் தயாரிக்கும் முதல் படம் நல்ல கதையுடன் இருக்கவேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். அவர் என்னைத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

இந்த மாதம் வெளிவரவுள்ள பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடலான ‘எங்கும் புகழ் துவங்க’ நேற்று (மே 18) வெளியானது.  இந்தப் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. முகநூலில் கவிஞர் வெயில் கூறியிருந்தது, ‘இன்று வெளியான ‘எங்கும் புகழ் துவங்க’ பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பால்யத்தின் நிலவறைகள் திறந்துகொண்டு ரத்தவாடை மிக்க காதல் நினைவுகளும் வேட்கைகொண்டு ஆடிய உக்கிர அடவுகளும் நினைவில் சுழன்று எழுகின்றன. சம்படி ஆட்டக்காரர்களின் குரலை ஒலிக்கச் செய்ததற்காக உன்னை எண்ணற்ற புழுதிச் சலங்கைகள் வாழ்த்தும். எனது உச்ச மனநிலைகளில் நான் ஆடுவதற்காக நீ உருவாக்கிய பாடல் என்பதாக நினைத்து மகிழ்கிறேன்.

சந்தோஷ் நாராயணன், ‘பரியேறும் பெருமாளி’ன் உணர்ச்சி முகம். வாழ்த்துகள் Mari Selvaraj தோழர் சந்தோஷ் நாராயணன், தோழர் Anthony Daasan, தோழர் கல்லூர் மாரியப்பன், தோழர் பா.இரஞ்சித்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT