செய்திகள்

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!

எழில்

ருட்யார்ட் கிப்ளிங், 1894-ல் தி ஜங்கிள் புக் என்கிற நூலை எழுதினார். இந்தியக் காடுகளில் வளரும் மெளக்லி என்கிற சிறுவனுக்கு விலங்குகளுடன் நேரும் அனுபவத்தை விளக்கும் அந்த நூல் மிகவும் கவனம் பெற்றது. 

தி ஜங்கிள் புக் நூல் பலமுறை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2016-ல் வெளியான தி ஜங்கிள் புக் படம் உலகளவில் வசூலை அள்ளியது. ரூ. 6,571 கோடி வசூல் கிடைத்தது (966 மில்லியன் டாலர்). இந்நிலையில் கிப்ளிங் எழுதிய நூல், மெளக்லி என்கிற பெயரிலும் 3டி திரைப்படமாக வார்னர் பிராஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ளது. கிறிஸ்டியன் பேலே, ப்ரீதா பிண்டோ நடிப்பில் ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

அட்டகாசமான இந்த ட்ரெய்லருக்குச் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்தப் படம் அக்டோபர் 19 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT