முகப்பு
செய்திகள்

காலா பட வெளியீட்டுத் தேதியை உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்!

துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காலா படத்தின் வெளியீடு சில தினங்கள் தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:08 PM
பகிர்:

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலா படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என்பது அதன் தணிக்கைச் சான்றிதழ் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காலா படத்தின் வெளியீடு சில தினங்கள் தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியாவதை இன்று உறுதி செய்துள்ளது. அது தொடர்பாக போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →