செய்திகள்

இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவிருந்த 'விஜய் அவார்ட்ஸ்’ ரத்து!

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி திரை நட்சத்திரங்களை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி கெளரவித்து வந்தது.

ராக்கி

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி திரை நட்சத்திரங்களை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக சில காரணங்களால் அவ்விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 10-வது ஆண்டு நிகழ்ச்சியை இன்று (26/05/2018) மாலை பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருந்தனர் விஜய் டிவி குழுவினர். நடிகை ராதா, இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கே.எஸ்.ரவிக்குமார், பாக்யராஜ், யூகி சேது ஆகியோர் ஜூரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். 

நடிகை காஜல் அகர்வால், அஞ்சலி ஆகியோரின் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்ட விட்ட நிலையில் திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்திருக்கும்படியும் விரைவில் மாற்றுத் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர் இந்நிகழ்ச்சியின் நிர்வாகிகள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் நடிகர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட கொந்தளிப்பான நேரத்தில் இத்தகைய ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்துவது சரியில்லை எனவே தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றனர் சேனல் தரப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT