முகப்பு
செய்திகள்

காலா படம் கர்நாடகாவில் வெளியாகுமா?: ரஜினி பதில்

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:10 PM
பகிர்:

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதனால் காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலா படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என்பது அதன் தணிக்கைச் சான்றிதழ் வழியாகத் தெரியவந்துள்ளது. காலா பட டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில நலன் கருதி காலா படத்துக்குத் தடை விதித்துள்ளதாக கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை விளக்கம் அளித்துள்ளது. இதனால் காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். சென்னையில் புறப்படுவதற்கு முன்பு, காலா படம் கர்நாடக மாநிலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ரஜினி கூறியதாவது:

கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை பேச்சுவார்த்தை நடத்தி காலா பட பிரச்னைக்குச் சுமூகத் தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →