முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பில் டான்சர் மரணம்: புணே டூ சென்னை வரை அஜித்தின் மனிதாபிமானம் 

விஸ்வாஸம் படப்பிடிப்பில் டான்சர் ஒருவர் திடீர் என மரணமடைய, அவரது உடலை பாதுகாப்பாக கொண்டு வர நடிகர் அஜித் உதவியுள்ளார். 

Updated On : 9 நவம்பர், 2018 at 11:52 AM
பகிர்:

சென்னை: விஸ்வாஸம் படப்பிடிப்பில் டான்சர் ஒருவர் திடீர் என மரணமடைய, அவரது உடலை பாதுகாப்பாக கொண்டு வர நடிகர் அஜித் உதவியுள்ளார். 

இயக்குநர் 'சிறுத்தை'  சிவா இயக்கத்தில் நடித்த வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, 'விஸ்வாசம்' என்னும் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 

படத்தின் டாக்கீ பகுதிகள் அநேகமாக முடிவடைந்திருக்கும் நிலையில் ஒரு பாடல் மட்டுமே மிச்சமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடலின் படப்பிடிப்பானது, மஹாராஷ்டிரா மாவட்டம் புனேவில்நடைபெற்று வருகிறது 

Advertisement

இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது அஜித்துடன் சரவணன் (42) என்னும் குழு நடனக்கலைஞரும் நடனம் ஆடினார். படபிபிடிப்பின் போது சரவணன் திடீரென வாந்தி எடுத்து மயக்கமானார். இதையடுத்து அவரை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  தகவலறிந்து உடனடியாகத் தான் தங்கியிருந்த இடத்தில இருந்து மருத்துவமனைக்கு அஜித் வந்துள்ளார். அத்துடன் நில்லாமல் சரவணனது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் வரை இரவு முழுவதும் உடன் இருந்திருக்கிறார்.     

அத்துடன் விமானத்தில் உடலைக் கொண்டு செல்வதற்கான தொகையான ரூ. 8 லட்சத்தையும் அவரே செலுத்தியுள்ளார். இதன் காரணமாக சரவணன் உடலானது விரைவாக சைதாப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது.  பின்னர் சைதாப்பேட்டையில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் அஜித் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அஜித்தின் இந்த நடவடிக்கையினை திரையுலகம் வெகுவாகப் பாராட்டி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.