முகப்பு
செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தின் 4 நிமிட விடியோ வெளியீடு!

இப்படத்தின் 4 நிமிடக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

நம்பியார் படத்தை இயக்கிய கணேஷா, விஜய் ஆண்டனி நடிப்பில் திமிரு புடிச்சவன் படத்தை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். காவல் அதிகாரியான விஜய் ஆண்டனியிடம் ஒரு வழக்கை விசாரிக்கிற நிலை வருகிறது. அது சுற்றி சுற்றி அவர் குடும்பம் வரைக்கும் போய் நிற்கிற மாதிரி பாதிப்பு வந்து விடுகிறது. இதுபோன்ற காவல்துறை தொடர்பான படத்தில் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்  விஜய் ஆண்டனி. அவருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ். நிவேதாவும் இதில் காவலர் வேடம் ஏற்றுள்ளார். இந்தப் படம் நவம்பர் 16 அன்று வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 4 நிமிடக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments