செய்திகள்

விஜய் - அட்லி படத்தில் விவேக்!

எழில்


மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு என தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2019 தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் தளபதி 63 அல்லது விஜய் 63 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விவேக் நடிக்கவுள்ளார். மெர்சல் படத்தில் நகைச்சுவை நடிகராக வடிவேலு நடித்திருந்த நிலையில் இந்தப் படத்துக்கு விவேக் தேர்வாகியுள்ளார். இந்தப் படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடிப்பதாக விவேக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது உறுதி செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT