செய்திகள்

பாலிவுட் நடிகை அனுஷ்காவிற்கு டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை!

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு அண்மையில் நடைபெற்றது. 

சினேகா

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு அண்மையில் நடைபெற்றது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை உள்ளிட்ட துறைகளில் வெற்றி பெற்று வரும் உலகளவில் பிரபலமானவர்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை நிறுவப்படுகின்றன.

லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச்  சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களின் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த விஐபிகளின் சிலை அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள்.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த மொபைல் ஃபோன் ஒன்று இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள மொபைல் போனின் மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நவீன வசதியுடன் இந்தச் சிலை அமைந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் குரல் பதிவு செய்யப்பட்டு அது காண்போரை வரவேற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமையான இத்தகைய வசதிகள் முதன்முறையாக மெழுகுச் சிலைகளை அமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT