நம்பத்தகுந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஷகீலாவின் படம்: நடிகை ரிச்சா சதா
நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஷகீலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார்.
நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஷகீலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து ரிச்சா சதா கூறியுள்ளதாவது:
Advertisement
Advertisement
அவருடைய திரைக்காலக்கட்டத்தில் ஆளுமையைச் செலுத்திய துணிச்சலான ஆன்மா ஷகீலா. மற்றவர்களுக்குத் தெரிந்ததை விடவும் பல விஷயங்கள் அவருடைய வாழ்க்கையில் உள்ளன. தற்போதும் நடிகையாக உள்ள அவருடைய கதையைப் படமாக்குவது எங்களுக்குக் கூடுதல் பொறுப்பை அளித்துள்ளது.
அடுத்த வருடம் படம் வெளியாகவுள்ளது. நம்பத்தகுந்த வகையில் அவருடைய வாழ்க்கையைப் படம் பிடித்துள்ளோம். இந்தப் படம் உருவாக ஷகீலா மிகுந்த ஒத்துழைப்பு அளித்தார். அவருடைய வாழ்க்கையை நுணுக்கமாக விவரித்ததால் நம்பத்தகுந்த கதையாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.