தயாரிப்பாளர் ஆனார் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன்!
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா, படத்தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா, படத்தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.
ஆகாசவானி என்கிற தெலுங்குப் படத்தை ஷோயிங் பிஸினஸ் என்கிற பட நிறுவனம் மூலமாக கார்த்திகேயா தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அஸ்வின் கங்காராஜு இயக்குகிறார்.
இப்படத்துக்கு பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணியின் மகன் கால பைரவா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Advertisement
பாகுபலி படத்தில் ராஜமெளலியிடம் யூனிட் இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திகேயா, பாடகி பூஜா குமாரைக் காதலித்து வருகிறார். பூஜா, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் அண்ணன் ராம் பிரசாத்தின் மகள். கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகேயா - பூஜா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்ததாக, ஜனவரி மாதம் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.