முகப்பு
செய்திகள்

சென்னையில் சர்கார் படத்தை விடவும் குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள 2.0 படம்!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சர்காரை விடவும் சற்று குறைவான எண்ணிக்கைக் கொண்ட திரைகளும் காட்சிகளும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 2.0 படம் சென்னையில் சர்கார் படம் வெளியான காட்சிகளின் எண்ணிக்கையை விடவும் குறைவாக வெளியாகியுள்ளதாக அறியப்படுகிறது. 

தீபாவளியன்று வெளியான சர்கார் படம் 22 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 22 திரையரங்குகளில் 74 திரைகள், 336 காட்சிகள் என அமர்க்களமாக வெளியானது. ரஜினியின் 2.0 படம் இதைவிடவும் அதிகத் திரையரங்குகள், அதிகக் காட்சிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

ஆனால், சென்னையில், 23 திரையரங்குகளில் வெளியாகியுள்ள 2.0 படம், 73 திரைகள், 320 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. (உதாரணமாக, சத்யம் திரையரங்கில் 6 திரைகளும் 25 காட்சிகளும், தேவி திரையரங்கில் 4 திரைகளும் 20 காட்சிகளும் இப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன). எஸ்கேப்-பில் 2.0 படத்தின் ஹிந்திப் பதிப்பு 2 காட்சிகளிலும் கேசினோவில் தெலுங்குப் பதிப்பு 4 காட்சிகளிலும் வெளியாகியுள்ளன.

ஆக, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சர்காரை விடவும் சற்று குறைவான எண்ணிக்கைக் கொண்ட திரைகளும் காட்சிகளும் 2.0 படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  பட வெளியீடுகள், திரையரங்குகள் குறித்த தகவல்களைச் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து அஜய் ஸ்ரீனிவாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

காற்றின் மொழி, சர்கார் போன்ற படங்களும் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதால் சர்காரை விடவும் குறைந்த காட்சிகள் 2.0 படத்துக்குக் கிடைத்துள்ளன. சென்னை நகரின் திரையரங்கு எல்லைகள் என ஏவிஎம், உதயம், எஸ் பெரம்பூர், பிவிஆர் ஸ்கைவாக், எம்எம் போன்ற திரையரங்குகளைக் கூறலாம். இதைத் தாண்டி உள்ள திரையரங்குகள் செங்கல்பட்டு மற்றும் இதரப் பகுதிகளைச் சார்ந்தவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments