முகப்பு
செய்திகள்

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்குத் தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்குத் தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்குத் தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. 

இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்குத் தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செக்கச் சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments