முகப்பு
இந்தியா

திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

திருவனந்தபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம்

Updated On : 4 ஏப்ரல் 2026, 7:28 pm IST
திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி சாலை வலம் - Bharatiya Janata Party | யூடியூப்
பகிர்:

திருவனந்தபுரம் : கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கிய தலைவர்கள் இன்று(ஏப். 4) சாலை வலமாகச் சென்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கேரளத்தில் வரும் ஏப். 9-இல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் படுதீவிரமாக மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் அணிகளுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில், கேரளம் சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இன்று மாலையில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி சாலைவலமாகச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கோரினார். அப்போது, பிரதமர் மோடியுடன் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் வேட்பாளர்கள் சிலர் உடனிருந்தனர். அவர்கள் அனைவரும் கைகளில் தாமரை சின்னம் பதிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, சாலையின் இருபுறங்களிலும் நின்ற மக்களிடம் கையசைத்து வாக்கு சேகரித்தனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, மக்கள் நெருக்கடி மிகுந்த திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதிகளில் பிரதமர் மோடி சாலை ஊர்வலம் சென்றதால் அப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதனால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

summary

PM Narendra Modi holds roadshow in Thiruvananthapuram for BJP candidates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.