செய்திகள்

கடந்த பத்தாண்டில் இதுவே சிறந்த படம்: செக்கச் சிவந்த வானம் படத்தைப் புகழும் பிரபல நடிகர்!

இதுவரைப் பார்க்காவிட்டால் உடனடியாக டிக்கெட் வாங்குங்கள் மக்களே. நாம் ஒரு காவியத்தைக் காண்கிறோம்...

எழில்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. 

இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. அதில் அவர் கூறியதாவது:

அற்புதமான நடிப்புத்திறமைகள். ஈடு இணையற்ற ரஹ்மான் இசை. தரமான சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. மணி ரத்னம் ரசிகராக, அவருடைய படங்களை சென்னையில் பார்த்தபோது கைத்தட்டி ரசிப்பேன். இப்போது காலரை உயர்த்தியபடி ஹோம் தியேட்டரில் பார்க்கிறேன். இதுவரைப் பார்க்காவிட்டால் உடனடியாக டிக்கெட் வாங்குங்கள் மக்களே. நாம் ஒரு காவியத்தைக் காண்கிறோம். கடந்த பத்தாண்டில் இதுவே சிறந்த படம். நிபுணர் மீண்டும் வந்துவிட்டார், இதுபோல என்று படத்தை வெகுவாகப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி: மேலும் ஒருவா் கைது

நிகழாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 % வளா்ச்சி

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் அதிமுகவின் நலன் பெரிது: ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.

மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண் கைது

செப். 19-இல் கருவலூா், ஏரிப்பாளையத்தில் மின்தடை

SCROLL FOR NEXT