செய்திகள்

குட்டிக்கதை தலைவர்களுக்கு மட்டும்தானா?: நடிகர் கருணாகரன் கேள்வி!

குட்டிக்கதை தலைவர்களுக்கு மட்டும்தானா அல்லது நடிகர்களுக்கும் உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார்... 

எழில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. சர்கார் படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று பேசினார் விஜய். மேலும் ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு குட்டிக்கதை கூறினார். தலைவன் தவறு செய்தால் அவரைப் பின்தொடர்பவர்களும் தவறு செய்வார்கள் என்று பேசினார் விஜய்.

குட்டிக்கதை தலைவர்களுக்கு மட்டும்தானா அல்லது நடிகர்களுக்கும் உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் கருணாகரன். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

குட்டிக்கதை தலைவர்களுக்கு மட்டும்தானா? அல்லது நடிகர்களுக்குமா? சமூகவலைத்தளங்களில்  உங்களுடைய ரசிகர்கள் மோசமாக நடந்துகொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளவும். அப்படிச் சொன்னால் அதை அவர்கள் கேட்டுகொள்கிறார்களா என்பதையும் கவனிக்கவும். மோசமாகவும் வெறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளவேண்டாம் என அவர்களிடம் கூறுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து கருணாகரனின் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT