செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ யில் இணையவிருக்கும் மற்றொரு பிரபல தமிழ் நடிகர் யார்?

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதை ரசிகர்கள் அறிவார்கள்.

சரோஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘பேட்ட’ திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமன்றி சாதாரண திரை ரசிகர்களுக்கும் தினமொரு இன்ப அதிர்ச்சிகளைத் தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. முன்னரே இத்திரைப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதை ரசிகர்கள் அறிவார்கள். இந்நிலையில் மற்றுமொரு ஜிலீர் சர்ப்ரைஸாக தற்போது சூப்பர் ஸ்டாருடன் இத்திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிக்குமாரும் இணையவிருக்கிறார் என சில திரைப்பறவைகள் கூவுகின்றன.

எப்படியோ எல்லோருமாகச் சேர்ந்து சூப்பர் ஸ்டார் திரைப்படத்தை அடுத்த ஒரு வெற்றிப்படமாக ஆக்கி முடித்தால் சரி தான். சசிக்குமார் இத்திரைப்படத்தில் இணைவது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை கூடிய விரைவில் வெளிவரும் எனப் படப்பிடிப்புக் குழுவினர் வட்டத்தில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT