செய்திகள்

'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் கதை இதுதான்!

சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

DIN

சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றிவேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல் துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர். முகேஷ்.

வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப்படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகான் பூர்ணா கோஷ்டி துரத்த. தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா தரப்பினரும் துரத்த, இறுதியில் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாக சொல்லுவதே கதை. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிசம்பர் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்!

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

SCROLL FOR NEXT