செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தேசிய விருது பெற்ற 'ஆரண்ய காண்டம்’புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'.

சினேகா

தேசிய விருது பெற்ற 'ஆரண்ய காண்டம்’புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமாரராஜா இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதில் அவர் திருநங்கை வேடத்தில் ஷில்பா எனும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிந்த பின்னர் திரையிடலை உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்கவிருக்கின்றனர். இதற்காக படத்தின் ரிலீஸ் தேதியை சில காலம் தள்ளி வைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், இதோ எனக்கு ரொம்ப புடிச்ச டைரக்டரோட (தியாகராஜா குமாரராஜாவோட) சூப்பர் டீலக்ஸ் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT