செய்திகள்

இயக்குநர் சுந்தர்.சி படத்தில் இணைந்த பிரபலம் இவர்தான்!

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த அத்திரண்டிகி தாரேதி

சினேகா

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த அத்தாரிண்டிகி தாரேதி என்ற படம் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியானது. இப்படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தமிழில் இயக்கவிருக்கிறார். நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் இதுதான். லைக்கா நிறுவனத்தின் டிவிட்டரில் இப்படம் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

'அத்தாரிண்டிகி தாரேதி’ படத்தில் சமந்தா மற்றும் ப்ரணிதா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்னர். தமிழ் ரீமேக்கில் மேகா ஆகாஷ் மற்றும் கேத்ரின் தெரசா நடிக்கின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் மஹத் தற்போது இணைந்துள்ளார். இத்தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள மஹத், இது குறித்த அதிகாரபூர்வமான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT