செய்திகள்

மீ டூ தொடர்பாக கோடம்பாக்கத்தின் முக்கிய தலைகள் மெளனம் சாதிப்பது ஏன்?: கவிஞர் லீனா மணிமேகலை கேள்வி!

எழில்

அண்​மைக் கால​மாகச் சமூக வலை​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்​கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில் இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடர இயக்குநர் சுசி கணேசன் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்தார் லீனா மணிமேகலை. பிறகு ஃபேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளதாவது:

பத்திரிகையாளர் கேள்வி:

உங்கள் மேல் மான நஷ்ட வழக்கு போட்டால் என்ன செய்வீர்கள்?

நீதிமன்றங்கள், சட்டம், காவல்துறை என்ற அதிகார நிறுவனங்களை நாடி களைத்துப் போய் தான் பெண்கள் மீ டூ இயக்கத்தின் மூலமாக மக்கள் மன்றத்தின் முன் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் கோருகிறார்கள். குற்றத்தை உணர்பவர்கள் திருந்துவதைக் குறித்து யோசிப்பார்கள். குற்றத்தைத் தொடர நினைப்பவர்கள் நீதிமன்றம் போகிறேன் என மிரட்டுவார்கள். எவ்வளவு மிரட்டல்களை, அதட்டல்களை, உருட்டல்களைப் பார்த்துவிட்டோம். என் விஷயத்தில் எதிர்வினையாற்றுகிறேன் என்ற பெயரில் என்னை அவதூறு  செய்திருக்கிறார் சுசிகணேசன்.  அவதூறு என்பது பாதிக்கப்பட்டவரை அசிங்கப்படுத்துவதாகும். மனித உரிமை மீறல். நான் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. அவரே அதையும் பார்த்துக் கொள்வார்.

பத்திரிகையாளர்கள் ஒருவர் விடாமல் கேட்கும் கேள்வி: ஏன் தாமதம். ஏன் குற்றம் நடந்தவுடன் முறையிடவில்லை?

இப்போது இவ்வளவு படைப்பு வேலைகள் செய்து ஒரு ஆளாகி நிற்கும்போதே இவ்வளவு பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது. அப்போதே சொல்லியிருந்தால் என்ன குற்றவாளியைப் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி என்னைப் பாதுகாத்திருப்பீர்களா? முறையிடும் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை என உங்களிடமே அந்தக் கேள்வியைத் திருப்புங்கள்! முறையிடும் பெண்ணை ஏன் களங்கப்படுத்துகிறீர்கள் எனச் சமூகத்திடம் கேளுங்கள்! ஏன் இந்த குற்றங்கள் நடக்கிறது என அதிகாரத்திடம் கேளுங்கள்.

முறையிடுவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே பொறுப்பாக முடியாது.

ஏன் கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் மெளனம் சாதிக்கிறார்கள்?

மெளனம் சாதிக்கிறவர்கள் குற்றத்திற்குத் துணை போகிறவர்கள். குற்றவாளிகளை விட மோசம் அவர்கள். இன்னும் சரியாகச் சொன்னால், மெளனம் சாதிக்கிறவர்களை நான் வெகுவாகச் சந்தேகிக்கிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT