முகப்பு
செய்திகள்

‘வட சென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்: வெற்றிமாறன் 

எங்கள் நோக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதல்ல. சர்ச்சைக்குரிய காட்சி 10 நாள்களுக்குள் நீக்கப்படும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

மீனவர்கள் தரப்பில் எழுந்த புகாரையடுத்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வட சென்னை இயக்குநர் வெற்றிமாறன் முடிவெடுத்துள்ளார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - வடசென்னை. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். வடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன். எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வட சென்னை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு மீனவர் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடல் எங்கள் தாய், கடற்கரை எங்கள் தாய்மடி என வாழ்ந்து வரும் மீனவ மக்களை தங்களது சினிமா சுய லாபத்திற்காகக் கொச்சைப்படுத்தியதற்குத் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், லைக்கா தயாரிப்பு நிறுவனம் போன்றோர் வருத்தத்தையும், விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என்று தென்னிந்திய மீனவர் சங்கம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். விடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

Advertisement

யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்கள் நோக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதல்ல. சர்ச்சைக்குரிய காட்சி 10 நாள்களுக்குள் நீக்கப்படும். படத்தில் உள்ள காட்சிகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments