செய்திகள்

நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது! இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படம்

சினேகா

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்தப் படம் தீபாவளியன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் தீபாவளியன்று வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

சமீபத்தில் இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் என்ஜிகே படம் தீபாவளிக்குப் பிறகுதான் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் எதிர்பார்த்த விஜய் vs சூர்யா படங்களின் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக இந்தக் கூட்டணியுடன் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைக்கு வந்து வெற்றி பெற்றது.

இச்செய்தியை மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பதிவில், விக்னேஷ் சிவன், இயக்குனர் செல்வராகவனுடன் இணைய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறி உள்ளதாகவும், இந்தப் படத்திற்காக நல்ல பாடல்களை எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT