70களில் ஹாலிவுட்டைக் கலக்கிய நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் காலமானார்
ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த ரெனால்ட்ஸ், 1972-ல் Deliverance படம் மூலமாகக் கவனம் ஈர்த்தார்...
70களில் ஹாலிவுட்டைக் கலக்கிய நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ், காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.
பிளோரிடா மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு குயிண்டன் என்று ஒரு மகன் உண்டு.
ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த ரெனால்ட்ஸ், 1972-ல் Deliverance படம் மூலமாகக் கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். The Longest Yard (1974), Smokey and the Bandit (1977), Semi-Tough (1977), Hooper (1978), Smokey and the Bandit II (1980), The Cannonball Run (1981), The Best Little Whorehouse in Texas (1982) என அடுத்தப் பத்து வருடங்களில் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகர் ஆனார்.
Advertisement
90களில் மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடித்த ரெனால்ட்ஸ், 1997-ல் Boogie Nights படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.