முகப்பு
செய்திகள்

பா. பாண்டிக்குப் பிறகு தனுஷ் நடித்து இயக்கும் படம்: பூஜையுடன் தொடங்கியது!

பா. பாண்டி படம் வெளியான அடுத்த வருடமே மற்றொரு படத்தைத் தொடங்கியுள்ளார். இந்தமுறை அவர் இயக்கும் படத்துக்கு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


இயக்குநராகச் சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் தனுஷுக்கு நிறைய உண்டு. அதனால்தான் பா. பாண்டி படம் வெளியான அடுத்த வருடமே மற்றொரு படத்தைத் தொடங்கியுள்ளார். இந்தமுறை அவர் இயக்கும் படத்துக்கு அவரேதான் கதாநாயகன். 

ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. தனுஷ், அதிதி ராவ் ஹைதரி, நாகர்ஜூனா, எஸ்.ஜே. சூர்யா, சரத் குமார், ஸ்ரீகாந்த் போன்றோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்,  இசை -  சீன் ரோல்டன். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வட சென்னை, மாரி 2, எனை நோக்கிப் பாயும் தோட்டா, வாழ்க்கைய தேடி நானும் போனேன் (ஆங்கிலப் படத்தின் தமிழ்ப் பதிப்பு) ஆகிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments