செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் மரணம் 

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கோவை செந்தில் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார்.

DIN

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கோவை செந்தில் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் முதலில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் கோவை செந்தில். பல படங்களில் குறிப்பிடத்தக்க அளவில் காமெடி வேடங்களிலும் கலக்கியுள்ளார். 'ஏய்' படத்தில் இவர் வடிவேலுவுடன்  சேர்ந்து நடித்த காமெடி காட்சியானது மிகவும் பிரபலமானது.

இவர் படையப்பா, புதுமை பித்தன், கோவா, இது நம்ம ஆளு, மௌன கீதங்கள் என்று பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.  அதிலும் குறிப்பாக இயக்குநர் விக்ரமன் இயக்கிய படங்களில் அதிகளவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஞாயிறன்று காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் சங்கம் மற்றும் பல்வேறு நடிகர்-நடிகைகள்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

SCROLL FOR NEXT