செய்திகள்

‘ஷகீலா’ பயோபிக்கில் நடிப்பதற்காக மலையாளம் கற்கும் இந்தி நடிகர்!

தேசிய விருது பெற்ற நியூட்டன் திரைப்படப்புகழ் பங்கஜ் திரிபாதியைத் தெரியுமா? காலாவில் ரஜினியுடன் எஸ் ஐ ஆக நடித்திருப்பாரே அவர் தான். அவர் நடிகை ஷகீலாவின் வாழ்க்கைச் சித்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

சரோஜினி

தேசிய விருது பெற்ற நியூட்டன் திரைப்படப்புகழ் பங்கஜ் திரிபாதியைத் தெரியுமா? காலாவில் ரஜினியுடன் எஸ் ஐ ஆக நடித்திருப்பாரே அவர் தான். அவர் நடிகை ஷகீலாவின் வாழ்க்கைச் சித்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தென்னிந்திய நடிகராக நடிப்பதில் இது அவரது முதல்முயற்சி. பயோபிக் வகையைச் சேர்ந்த இந்த திரைப்படத்தில் ஷகீலாவாக நடிக்கவிருக்கிறார் ரிச்சா சதா எனும் இந்தி நடிகை.

ஷகீலா அடிப்படையில் ஒரு மலையாள நடிகை என்பதால்... அவரது கதையை திரைப்படமாக்குகையில் இந்தி நடிகர்களின் திரைமொழி மலையாள மண் வாசத்துடன் ஒட்டாமல்... தனித்துத் தெரியக் கூடாது என்பதற்காக தற்போது பங்கஜ் திரிபாதி மலையாளம் கற்று வருகிறாராம். மலையாள நடிகர்கள் இந்தித் திரைப்படங்களில் நடித்திருக்கும் டிவிடிக்களை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களது மலையாள உச்சரிப்பைப் புரிந்து கொள்ள முயன்று வருகிறாராம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT