முகப்பு
செய்திகள்

500 படங்களில் நடித்த மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமானார்!

மலையாளம், தமிழ், தெலுங்கும் கன்னடம், ஹிந்தி என 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமாகியுள்ளார். அவருக்கு வயது 68.

தன்னுடைய மகனின் திருமணத்துக்காக சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றபோது விமான பயணத்திலேயே கேப்டன் ராஜுவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மஸ்கட்டில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஒரு வாரத்துக்குப் பிறகு, ஜூலை 2 அன்று அவர் கொச்சிக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில் தொடர்ந்து  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். கேப்டன் ராஜுவுக்கு பிரமீளா என்கிற மனைவியும் ரவி என்கிற மகனும் உள்ளார்கள். 

இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றிய ராஜு, திரைப்படங்கள் மீதான ஆர்வம் காரணமாக வேலையை ராஜிநாமா செய்தார். 1981 முதல் திரைப்படங்களில் நடித்துவந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கும் கன்னடம், ஹிந்தி என 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். Nadodikattu, Oru Vadakkan Veeragadha, Pavam Krooran போன்ற படங்கள் அவருக்குப் புகழைத் தந்தன. இரு படங்களையும் இயக்கியுள்ளார். 2017-ல் கடைசியாக, மாஸ்டர்பீஸ் என்கிற மலையாளப் படத்தில் நடித்தார். கேப்ரன் ராஜுவின் மறைவுக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments