முகப்பு
செய்திகள்

செக்கச் சிவந்த வானம் வெளியாவதில் திடீர் சிக்கல்!

செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தில் நாய் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால் விலங்கியல் நல வாரியம் இப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி இதே காரணத்துக்காக செக்கச் சிவந்த வானம் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால் மறுபடியும் படக்குழுவினரால் சமப்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விலங்கியல் நல வாரியத்திலிருந்து மறுப்பு வந்துள்ளது.

போலவே விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் சண்டைகோழி 2, ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி ஆகிய படங்களுக்கும் NOC வழங்க மறுத்துள்ளது விலங்கியல் நல வாரியம்.

முழு கட்டுரையைப் படிக்க →