செய்திகள்

பாலா இயக்கியுள்ள 'வர்மா' படத்தின் டீசர் 

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும், பாலா இயக்கியுள்ள 'வர்மா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும், பாலா இயக்கியுள்ள 'வர்மா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். இவர், கதக் நடனத்தை முறையே கற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் வர்மா படத்துக்கும் இசையமைத்துள்ளார். அது அவருடைய 4-வது தமிழ்ப்படம். முன்னதாக விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'வர்மா' படப்பிடிப்பு  பாலா நிறைவு செய்துள்ள தகவல் வெளியானது. 

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT