செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

தன்னுடைய படங்களின் வியாபாரம் அதிகமாகிவிட்டதால், தற்போதைக்குப் புதிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை...

எழில்

விஷால், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப் படம் - இரும்புத்திரை.  இப்படத்தின் இயக்குநர் மித்ரனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சீமராஜா படம் உள்ளிட்ட சிவகார்த்திகேயன் படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. அடுத்த வருடம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் குறித்த இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரு படங்களில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். அடுத்ததாக, எம். ராஜேஷ் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் போன்றோர் நடிக்கிறார்கள். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன்,  தொடர்ந்து ஒரே இயக்குநர்களின் படங்களில் நடிக்காமல் வெற்றிப்படங்களைத் தந்துள்ள இயக்குநர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். 

தனக்கு வெற்றிப்படங்களை அளித்த துரை செந்தில் குமார், பொன்ராம் ஆகியோருடன் மீண்டும் இணைந்தாலும் தனி ஒருவன், இன்று நேற்று நாளை, இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களை அளித்த இயக்குநர்களுடன் இணைவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். எனினும் தன்னுடைய படங்களின் வியாபாரம் அதிகமாகிவிட்டதால், தற்போதைக்குப் புதிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை. தான் எந்த விதமான படங்களில், எந்தவிதமான இயக்குநர்களுடன் பணியாற்றவேண்டும் என்பதில் அவர் அதிகக் கவனத்துடன் இருப்பது இதன்மூலம் தெரியவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் கரோனா கால செவிலியா்கள் முற்றுகை!

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வா் விடுவிப்பு

‘கேரளம்’ என பெயா் மாற்றம்: இடதுசாரி அரசுக்கு ஆதரவாக பிரதமருக்கு கேரள பாஜக கடிதம்

ராகுல் காந்தியுடன் அரசியல் பேசவில்லை: சித்தராமையா

பாகிஸ்தான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக இருந்தது: இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

SCROLL FOR NEXT