முகப்பு
செய்திகள்

நடிகை ரம்பாவுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது: கணவர் தகவல்!

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

நடிகை ரம்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ரம்பா. 

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார் நடிகை ரம்பா. இந்தத் தம்பதியருக்கு லான்யா, சாஷா என இரண்டு பெண் குழந்தைகள். கருத்துவேறுபாடு காரணமாக, சிலகாலம் இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். இவர்களுடைய குடும்பப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இதன்பிறகு நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் இருவரும் சுமூகமாகி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்தார்கள்.

ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரம்பாவுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 23-ம் தேதி டொரண்டோவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகச் சமூகவலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார் ரம்பாவின் கணவர். 40 வயது ரம்பாவும் இத்தகவலை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments