முகப்பு
செய்திகள்

பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நானா படேகருடன் இணைந்து நடிக்கலாமா?: ரஜினிக்குப் பிரபல பாலிவுட் நடிகை கேள்வி!

பெரிய நடிகர்கள், அவரைப் போன்ற குற்றவாளியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தால்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நானா படேகருடன் இணைந்து நடிப்பதை பிரபல நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா கோரிக்கை விடுத்துள்ளார். 

2009-ல் வெளியான ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் தன்னிடம் ஒரு பிரபல நடிகர் மோசமாக நடந்துகொண்டதாகப் பேட்டியளித்தார் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்நிலையில் அந்த நடிகரின் பெயரைத் தற்போது கூறியுள்ளார். ஜூம் டிவிக்கு அளித்த பேட்டியில் தனுஸ்ரீ தத்தா கூறியதாவது:

பெண்களிடம் நானா படேகர் மோசமாக நடந்துகொள்வது பற்றி பாலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் அது குறித்துப் பேசுவதில்லை. பெண்களிடம் அவர் மரியாதைக்குறைவாக நடந்துகொள்வது பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் நடிகைகளை அடித்துள்ளார், அவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். பெண்களிடம் அவர் மோசமாகவே நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் குறித்து யாரும் எழுதியதில்லை. 

Advertisement

கடந்த எட்டு வருடங்களில் நானா படேகருடன் இணைந்து அக்‌ஷய் குமார் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினி கூட அவருடன் நடித்துள்ளார். பெரிய நடிகர்கள், அவரைப் போன்ற குற்றவாளியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தால், மீ 2 போன்ற விழிப்புணர்வுப் போராட்டங்கள் இங்கு நடைபெறாது. திரைத்துறையில் நடிகர்கள் பற்றிய நிறைய கதைகளை நீங்கள் கேட்பீர்கள். ஆனால் அவர்கள் மக்கள் தொடர்புப் பணிகளில் அதைச் சரிகட்டி விடுவார்கள். சில விவசாயிகளுக்கு நிதியுதவி செய்துவிடுவார்கள். இவை எல்லாம் விளம்பரங்களுக்காகச் செய்பவைதான் என்று காட்டமாக விமரிசனம் செய்துள்ளார். 

ஜார்க்கண்டைச் சேர்ந்த தனுஸ்ரீ தத்தா, 2005 முதல் பாலிவுட்டில் நடித்துவருகிறார். 2010-ல் விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்கிற படத்தில் நடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments