இயக்குநர் மகேந்திரன் மறைவு: அஞ்சலி செலுத்திய பிரபல நட்சத்திரங்கள்! (படங்கள்)
மகேந்திரனின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்..
பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது, 79.
முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, கை கொடுக்கும் கை போன்ற முக்கியமான தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் வெளியான சாசனம் அவர் இயக்கிய கடைசிப் படம். தெறி, சீதக்காதி, நிமிர், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக மகேந்திரனின் உடல் காலை 10 மணி முதல் அவருடைய சென்னை - கொளத்தூரில் உள்ள நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரனின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் புகைப்படத் தொகுப்பு: