செய்திகள்

ரஜினி நடிக்கும் தர்பார் பட வில்லன் இவர் தான்!

தர்பார் படத்தின் பூஜை மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் ரஜினி.

தர்பார் படத்தின் பூஜை மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் தேர்வாகியுள்ளார். இது இவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. பிரதீக், நடிகர்கள் ராஜ் பப்பர், ஸ்மிதா படீலின் மகன் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT