முகப்பு
செய்திகள்

சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள அந்தாதுன் என்கிற ஹிந்திப் படம் சீனாவில் வசூலில் சாதனை செய்துவருகிறது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள அந்தாதுன் என்கிற ஹிந்திப் படம் சீனாவில் வசூலில் சாதனை செய்துவருகிறது. 

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம் சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 13-வது நாளில் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது. ஏப்ரல் 3 அன்று சீனாவில் பியானே பிளேயர் என்கிற பெயரில் வெளியானது. 

இந்தியாவில் கடந்த வருடம்  அக்டோபர் மாதம் வெளியான அந்தாதுன் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தியாவில் அடைந்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் உள்ளது. தற்போது சீனாவில் இப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.  பஜ்ரங்கி பைஜான், ஹிந்தி மீடியம் ஆகிய ஹிந்திப் படங்களின் வசூல்களைத் தாண்டி டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது அந்தாதுன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.