செய்திகள்

ஆர்டிகிள் 15 பட ரீமேக்கில் ஆர்வம் செலுத்தும் தனுஷ்!

இந்தப் படத்தைத் தமிழில்  ரீமேக் செய்ய ஆர்வம் செலுத்தியுள்ளார் நடிகர் தனுஷ்...

DIN

சமீபத்தில் வெளியான ஆர்டிகிள் 15 ஹிந்திப் படம் அதிகக் கவனத்தைப் பெற்றதோடு இந்தியாவில் ரூ. 64 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியது. 

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, இஷா தல்வார், சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, மனோஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தைத் தமிழில்  ரீமேக் செய்ய ஆர்வம் செலுத்தியுள்ளார் நடிகர் தனுஷ். ஏற்கெனவே மற்றொரு ஹிந்திப் படமான அந்தாதுன் பட ரீமேக் உரிமையை வாங்கவும் தனுஷ் முயன்று வருகிற நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் ஆகிய படங்களில் தனுஷ் தற்போது நடித்துவருகிறார். மேலும் மாரி செல்வராஜ், ராம்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT