செய்திகள்

"யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி..": சர்ச்சைப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பிரபல இயக்குநர் 

DIN

சென்னை: "யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி எல்லாம் இருக்கும் போது." என்ற தனது சர்ச்சைப் பேச்சுக்கு பிரபல இயக்குநர் ராஜு முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் ராஜு முருகன். இவர் சமீபத்தில்  மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முந்திரிக்காடு'. என்னும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவருடன் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும் போது, “இந்தப் படத்தில் நாயகன் புகழ் எங்க  பிள்ளை. இங்கிருக்கும் சீமான் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள். யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி எல்லாம் இருக்கும் போது நம்ம பிள்ளைக்கு ஒரு பட்டம் வைத்துவிடுங்கள். ஒரு இடதுசாரி தகப்பன் வளர்க்கும் பிள்ளை எப்படியிருப்பான் என்பதற்கு புகழ் ஒரு உதாரணம். அவன் திரைப்படத்தை மிகத்தீவிரமாக நேசிக்கக் கூடியவன். நிச்சயம் புகழ்மிக்க நடிகனாக அவன் மாறுவா ன்” என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை உருவாக்கியது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சினை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டனர் 

இந்நிலையில் தனது சர்ச்சைப் பேச்சுக்கு பிரபல இயக்குநர் ராஜு முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று கூறியுள்ளதாவது:

ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT