செய்திகள்

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணமா?

நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர் நடிகர் பிரேம்ஜி.

சினேகா

நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர் நடிகர் பிரேம்ஜி. சென்னை 28 மங்காத்தா, கோவா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் மட்டுமன்றி இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்திருப்பார். அவருக்கென தனி ரசிகர் வட்டாரம் உண்டு. 

அண்மையில் பிரேம்ஜி தனது ட்விட்டரில் வித்யாசமான ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கேம் ஓவர் என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு டீ ஷர்ட் - அதை அணிந்திருக்கும் பிரேம்ஜி குனிந்து கொண்டிருப்பார். இது அவரது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பா அல்லது சொந்த வாழ்க்கையின் நிகழ்வா என்று தெரியாமல் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இதுவரை சிங்கிளாக இருந்துவிட்டேன், இனி கேம் ஓவர் என்பது போன்ற பொருள் கொண்ட அந்த டீ ஷர்ட் வாசகம் நெட்டிசன்களை குழப்பி வருகிறது. வழக்கம் போல குறும்புடன் சும்மாதான் அந்த பதிவைப் போட்டேன் என்று அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அது எதுவாக இருந்தாலும் சரி பிரேம்ஜியின் இந்த வித்யாசமான அறிவிப்பு சமூக வலைத்தலங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT