செய்திகள்

ஜெயம் ரவியின் கோமாளி பட ட்ரெய்லர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி.

சினேகா

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 விதமான கெட்டப்புக்களில் தோன்றுகிறார். ஆதிவாசி, ஐடி இளைஞர்ன், அடிமை உள்ளிட்ட தோற்றங்களில் கலக்கியிருக்கிறார். ஒரு கெட்டப் ஜோக்கராக இருக்கலாம் என்று தெரிகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையுடன் பேசுகிறது கோமாளி. இப்படத்தின் பாடல்களை அண்மையில் வெளியிட்ட படக்குழு, ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளது.  

ட்ரெய்லர் முழுக்க யோகி பாபுவுடன் காமெடியில் கலக்கியுள்ளார் ஜெயம் ரவி. ஒரு வசனத்தில் யோகி பாபுவிடம், 'ஜெயம் ரவி மாதிரி வந்து நிப்பேன்னு பாத்தா நிழல்கள் ரவி மாதிரி வந்து நிக்கறே?' என்பார். மற்றொரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பதை டிவியில் செய்தியாக பார்க்கும் ஜெயம் ரவி, 'இது 96-ம் வருடம். யாரை ஏமாத்துறீங்க’ என்பார். 

இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷ் காலத்து அடிமை உள்ளிட்ட பல கெட்டப்புகளில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.  பிரபாஸ் நடித்த சாஹோ படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவருகிற நிலையில் அதே தினத்தில் கோமாளி படமும் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT