செய்திகள்

'டியர் காம்ரேட்' படம் பார்க்காதீங்க! என்ன காரணம்?

கன்னடத்தில் நடித்து வந்த  ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக  'கீத கோவிந்தம்'  படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

உமா ஷக்தி.

கன்னடத்தில் நடித்து வந்த  ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக  'கீத கோவிந்தம்'  படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

இப்போது 'டியர் காம்ரேட்' என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடத்திலும் டப்பிங்  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த மொழியில் நடிப்பது கஷ்டம் என ராஷ்மிகாவிடம் கேட்ட போது, 'கன்னடத்தில் பேசி நடிப்பதுதான் கஷ்டம்'' எனச் சொல்லியிருக்கிறார் ராஷ்மிகா.

இதைக் கேட்டு கன்னட அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. 'கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா கன்னடம் பேசுவது கஷ்டம் எனக் கூறுவதா? மற்ற மொழிகளில் பிரபலம் அடைய தனது மொழியைப் புறம் தள்ளுவதா?' என கொதித்து எழுந்துள்ளன.

இந்த நிலையில் சுட்டுரையில் 'பாய்காட்  டியர் காம்ரேட்' என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ராஷ்மிகாவுக்கும் அவரது படத்துக்கும் எதிராகப் போராட்டத்தை கன்னடர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் ராஷ்மிகா கலக்கம் அடைந்துள்ளார்.

டியர் காம்ரேட் படத்தின் திரை விமரிசனம் இது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT