செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்தில் கூடுதலாக 25 நிமிடக் காட்சிகள்! காரணம் என்ன?

ஹிந்தியில் பிங்க் படத்தின் கால அளவு 130 நிமிடம் மட்டுமே. ஆனால் தமிழில் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது...

எழில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படமான நேர்கொண்ட பார்வை-யை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் இது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 8 அன்று இப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ஹிந்தியில் பிங்க் படத்தின் கால அளவு 130 நிமிடம் மட்டுமே. ஆனால் தமிழில் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது. ஏன் இந்த மாற்றம்? ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பட இயக்குநர் வினோத் அளித்த பேட்டி:

மூலப்படத்தின் அடிப்படை அம்சத்தை மாற்ற விரும்பவில்லை. எனினும் அஜித் சாரின் ரசிகர்களை மனத்தில் கொண்டு கூடுதலாக 25 நிமிடங்களை நேர்கொண்ட பார்வை-யில் இணைத்துள்ளேன். வித்யா பாலன் வருகிற 10 நிமிடங்களும் இதில் உள்ளன. படத்தின் மையக்கருத்தை இழக்காமல் கமர்ஷியல் படமாக உருவாக்க எண்ணினேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT