செய்திகள்

நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்! பிரியா பவானி சங்கரின் உருக்கமான பதிவு

'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது.

சினேகா

'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார்.

இந்தியன் 2- வில் ஒரே ஒரு கமல்ஹாசன்தான். அதுவும் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.  

முதல் பாகத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு அண்மையில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகிழ்ச்சியை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, 'இந்த பெரிய சந்தோஷமான விஷயம் இப்போது சிறிது காலமாக என்னை உற்சாகப்படுத்தி வருகிறது. நான் பிரபஞ்சத்தை நம்புகிறேன், உங்கள் செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதை எல்லாம் பிரபஞ்சம் உங்களுக்குத் தருகிறது. ஆனால் கமல் சாருடனும், எனக்குப் பிடித்த நடிகரான சித்தார்த் உடனும், க்வீன் படத்தில் நடக்கும் அரசி காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. அதிலும் ஷங்கர் சாரின் இயக்கம் என்றால் அது மிகப் பெரிய ஆசிர்வாதம். அனிருத் இசை பற்றி கூடுதலாக சொல்லவும் வேண்டுமா? ஒரே நேரத்தில் அல்லா ஆசிகளும் எனக்குக் கிடைத்துவிட்டதைப் போல உணர்கிறேன்.' என்று பிரியா பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT