செய்திகள்

‘சாக்‌ஷி உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்கணும்’: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை கஸ்தூரி இணைந்துள்ளார். இன்று ஒளிபரப்பாகவுள்ள...

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை கஸ்தூரி இணைந்துள்ளார். கஸ்தூரியின் வருகை இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது. இதற்கான முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்த கஸ்தூரி, உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்று சாக்‌ஷியிடம் கேட்கும் காட்சி முன்னோட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கஸ்தூரியின் வருகையால் பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT